வியாழன், 5 டிசம்பர், 2013

இந்திய ஏழைகளின் வாழ்கையில் ஒருநாள்

இந்திய  ஏழைகளின் வாழ்கையில் ஒருநாள் 

27 ரூபாய் மட்டும் போதும் இந்தியாவில்  வாழ்கை நடத்த,ஒருநாள் வருமானம்.
இந்த அளவுகோல் ஏழைகளுக்கு மட்டும் தான்,நம் நாட்டின் ஜனாதிபதிக்கு இல்லை.
ஆம் ,உண்மை.

அழகான கனவில் அவர் தன்னையே காண்கிறார்,தான் ஒரு மாளிகையில் வசிப்பதாக காண்கிறார்.அது,கனவல்ல நிஜம்,அந்த மாளிகை தன் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் மாளிகைதான்.

19 வயதான அமித் மண்டல்,ஒரு பண்ணை தொழிலாளி,அவ்வபோது செங்கல் சூளையிலும் வேலைக்கு செல்வார்.அந்த கனவில் வரும் வீடு,அவர் குடியிருக்கும் வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் தான் இருக்கும்.

      
அந்த தொகுதி நம்மளுதா !

பெங்காலின் தெற்கு பகுதி,முர்சிதாபாத் மாவட்டம்,   ஜாங்கிபுர் தொகுதி ,சுனதிகுரி கிராமம் ,அமித்தின் ஊர்.இந்தியாவின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்று.ஜன்கிபூர்,இந்தியாவின் நிதி அமைச்சரையும்,ஜனாதிபதியும் தந்த தொகுதி.ஆம்,நமது குடியரசு தலைவரின் தொகுதி.அந்த கனவில் வந்த மாளிகை அவர் தேர்தல் நேரங்களில் அவர் தங்க கட்டப்பட்ட வீடு ,இப்போது அவரின் வாரிசு அபிஜித் முகர்ஜி குடியிருக்கும் வீடு.

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வீடு நம் தொகுதி எம் .பி .க்காக கட்டப்பட்டது என்பது கூட அவருக்கு தெரியவில்லை.

அவரது வீட்டில் அமித் உட்பட எட்டு பேர்.அவரும் அவரது அப்பாவும் சேர்த்து சம்பாதிக்கும் வருமானம் வெறும் 27 ரூபாய்.
திட்டக்குழுவின் கணக்கு படி,27 ரூபாய் மட்டும் இருந்தால் வாழ்கை நடத்தலாம் என்று இந்தியாவின் (planning commission)   திட்டக்குழுவின்  வாதம்.
மாண்டேக் சிங் அலுவாலிய,அவரின் ஆபிசின் கழிவறை புதுபிக்க 37 லட்சம் ரூபாய் செலவு செய்த அந்த மேதையின் கணக்கை குப்பையில் தான் போடணும்.         

''பசியோடு இருபதுதான் இங்கு வாழ்கை,சிறிது காலத்தில் அது பழகி வலி மறைந்து விடுகிறது ''

                                                         -அமித் மண்டல் ,19                                

"உணவு தேடி அலைய வேண்டாம் என்றால்,வாழ்கை எளிதாக இருக்கும் .யாரும் உணவுக்காக பிச்சை எடுக்க வேண்டாம் " 
                                                                                                     -சோபியா ஷேக் ,30

இவர்களின் மாத வருமானம் வெறும் 2,500 ரூபாய்(நாள் ஒன்றுக்கு ரூ .83)
அதுவும் நெல் சாகுபடியின் போதுதான்.மற்ற நேரங்களில் மாதம் 1800 ரூபாய் தான்.  

இவர்களை பார்த்தும் பொறாமை படும் மக்களும் இருபதுதான் ஆச்சர்யம்.ஆம் இவரின் பக்கத்துக்கு ஊர் மக்கள்,இவர்களை கொடுத்து வெய்த மக்கள் என்கின்றனர்.தினமும் ரூ .27 என்பது பெரிய விஷயம் என்கிறார்கள்.


ஷபில நாத் ,35 பீகார் மாதம் 5000 ரூபாய் வருமானம் 


                         ராஜேஷ் குமார் ,டெல்லி மாதம் 5000 ரூபாய் வருமானம் 
அன்றாட வாழ்வில் மக்கள் சோற்றுக்கு இன்றும் போராடுகின்றனர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக